தொலைநோக்கு
நல்லாட்சி முறையும் நிலையான அபிவிருத்தியையும் கொண்ட சிறந்த சேவையினை வழங்குதல் .

பணி

அரச கொள்கைகளை செயலாக்கம் கொண்ட பயனுள்ளதான முறையில் நிறைவேற்றி பிரதேச மக்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்காக இருக்கும் வளங்களை முறையாக நிர்வகித்து அரசசேவையை துரிதமாக நிறைவேற்றுதல் .

office poto 1

அமைவிடம்

 வடநெட்டாங்கு 6.5" முதல் 6.52" வரை  கிழக்கு அகலாங்கு 79.5".1" முதல் 79.5".2" வரை இடம் .

தொடர்புபட்டநிலை :

எல்லைகள்

வடக்கு : தெஹிவளை கால்வாயும் கோட்டை நகரசபை எல்லையும் .

தெற்கு :கல்கிசை ,கவ்டான கிராமஅலுவலர் பிரிவும் .

கிழக்கு : வெரஸ் கங்கையும் ,பொல்கொட  நதியின் ஒரு பகுதியும் ,கஸ்பாவ பிரதேச செயலாளர் பிரிவு எல்லையும் .

மேற்கு : இயற்கை கடற்கரை பிரதேசம் .

எல்லாமாக  8.71 சதுர கிலோமீற்றர் அல்லது 871.03 கெக்கரயர் சிறிய பகுதி இந்தப் பிரதேசத்தில் தங்கியுள்ளது .கொழும்பு மாவட்டத்தினுடைய (673.62 ச.கி ) முழு பிரதேசத்துடன் ஒப்பிடும்போது  1.29% பகுதி மட்டுமே தெஹிவளை ஆகும். ஆனால் வேறு இடங்களுடன் ஒப்பிடும்போது இச்சிறிய பிரதேசம் மதிப்பிட்டுக் கூறமுடியாத பெறுமதியையும் சிறப்பம்சங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது .

 கொழும்பின் வியாபாரத் தலைநகரின் தெற்கு பகுதியுடன் இணைந்ததாக தெஹிவளை நகரம் இருக்கிறது.இது கொழும்பிற்கான போக்குவரத்துடன் நேரடியான இணைப்புவழியாக அமைந்துள்ளது .தலைநகர் கொழும்பின்  1.29%பிரதேசத்தை மட்டும் கொண்டுள்ள இச்சிறிய தெஹிவளை பிரதேசமானது 8.71ச.கி  ஆகும்.

இந்தப் பிரதேசத்தினுடைய பெறுமதியில்  பல காரணங்கள் தாக்கம் செலுத்துகின்றன .இது ஆசியாவினுடைய மிகபபெரிய தேசிய விலங்கியல் பூங்காவின் அமைவிடமாகவுள்ளது .இப்பிரதேசத்தினுடைய மற்றுமொரு முக்கிய இடமாக கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை அமைந்துள்ளது .இந்த நகரம் சிறிய சனத்தொகையையும் அத்துடன் சிறிய கைத்தொழில்மயமாக்கலையும் உள்ளுர்மயப்படுத்தலையும் அண்மைக்காலங்களாக விரிவுபடுத்தியுள்ளது .தெகிவளைப்பகுதியானது கொழும்பு தெற்குடன் நேரடியாக தொடர்பு பட்டிருப்பதால் காலிவீதியூடாக நாட்டினுடைய தெற்கு கடற்கரை பிரதேசத்துடன் இணைந்துசெல்கிறது .

வரலாறு

இந்தப் பிரதேசத்தைப்பற்றி பல கதைகள் உள்ளன .திய+ வல என்பதன் கருத்து துளையானது முழுவதும் நீரால் நிரபப்பட்டது.கடந்த காலங்களில் இப்பிரதேசமானது குட்டைகள்,கால்வாய்கள் நிரம்பிய பிரபலமான தியவல(பிரதேசமானது நீரால் நிரப்பப்ப ட்டது)  என அழைக்கப்பட்டது.பிற்காலத்தில் இதுவே தெகிவளையாக வந்தது .

இன்னொரு கதையாக   அதிக தேசி மரங்கள் காடுபோன்று காட் சியளித்தமையால்  அம்மக்கள் அப்பிரதேசத்தை தெஹிவளை என அழைத்தனர்.தேசிமரங்களினுடைய கோட் டையாக சொன்னார்கள்.  

கீழ்க்காட்டபப்பட்ட  விவரணங்கள் இந்தப்பிரதேசத்தில் வேறுகிராமங்களின் உருவாக்கத்தை குறிப்பிடுகின்றன .

1.கத்போதிய:

அந்தக் காலத்தில் கோவில் ஒன்று ஏழு அரச  மரங்களால் சூழப்பட்டிருந்ததால் அப்பிரதேசம் கத்போதிய என அழைக்கப்பட்டது. 

2.நிக்கபே :

அந்தப்பிரதேசத்தில் சிறிய அளவில் நிக்கா மரங்கள் (ஒரு வகையான ஆயுள்வேத மருத்துவ ) காணப்பட் டத்துடன் அத்திடிய பிரதேச நிலங்களுக்கு கிட்ட காட்டுப் பகுதியாக தென்பட்ட இடமே நிக்கபே ஆகும்.

3.கரகம்பிட்டிய:

கரவ இனத்தைச் சேர்ந்த மக்கள் மீன் பிடித்தொழிலைச் செய்து தங்கள் வாழ்வின்வழியாகக் கொண்டிருந்தனர்.

4.உத்யான :

இந்தப் பகுதி ஒரு முறை "பாத்தியமுல்லை"' என அழைக்கப்பட்டது. இதன் அர்த்தம் நிறையப் பால் ,தயிர் உற் பத்திசெய்யப்படட  ஒரு கோட்டையாக திகழ்ந்தது .சுமார் 500 இற்கும் மேற்பட் ட  மாடுகள் போக்குவரத்திற்காக பபயன்படுத்தப்பாட்ட்தாக அந்தக் காலமக்களின் கதைகள் கூறு  கின்றன.                

05.விலவல 

மழைக்காலப்பகுதியில் நிறைய நீர் குட்டைகள்,குழிகள்   வழிந்து நிரம்பி வழியும் இடமாககாணப்பட்டது.அந்த இடத்தில் குட்டைகள்,குழிகள்  அதிகம் கணப்பட்டதால் விலவளல என அழைக்கப்பட்டது.

6.6 பாமங்கட:

பலபொக்குன ரஜமகா விகாரைக்கும் பாமங்கடைக்கும் இடையில் கால்வாய் ஒன்று கட்பபட்டுள்ளது.ரஜமகா விகாரையுடன் சிங்கள இராணுவத்தினர் அந்தக் கால்வயினூடாக  அடிக்கடி நடந்து செல்வார்கள் .இதனால் அதனை பாமங்கடை என அழைத்தனர் .கோட்டைசிறையில் இருந்த காலத்தில் இந்தக் கால்வாயினூடாக மேதையா  மன்னனை விடுதலை செய்து அழைத்துச் சென்றனர் .இந்தக் கால்வாயை பயன்படுத்தி  அவரை மக்களின் ஆலோசனைக்கு அமைவாக பெப்பிலியான ரஜமஹா விகாரைக்கு எடுத்துச் சென்றனர் . 

7.7.களுபோவிலை : காலி வீதியை தவிர மத்திய பகுதியானது புவியியல் ரீதியாக சிறிய மலைகளால் சூழப் பட்டிருந்தது . உள்சுற்றப் பகுதியானது கறுப்பு கற்கள் நிறைந்த குழிகளாக காணப்பட்டது.அதனுடைய பகுதியானது குழிகள் நீரால் நிரப்பப்பட்டு கடும் கருமை நிறமாக காட்சியளித்தது.நீர் தேங்கிய கருமை     குட் டைகள்  இருந்தமையால் ஆதிமக்களால் களுபோவில என அழைக்கப்பட்டது .

கடமையாற்றிய பிரதேச செயலாளர்கள் பட்டியல்

            பெயர்

    முதல்

      வரை

திரு.ஜி .குலதுங்க

1988

1989

திரு.சல்மான் குணரத்தன

1989

1992

திரு.பி.டி .தஹநாயக

1992

1996.11.03

திரு.கே .ஏ .திலகரத்ன

1996.11.04

1998.11.30

திரு.சி.வாஸ் குணவர்தன

1998.12.01

2000.02.17

திரு.கே .டி. ஆர் .என்.  விஜேசிங்ஹ

2000.02,23

2005.01.23

திருமதி.டபிள்யு.சுனிதா கூரே

2006.03.08

2012.01.07

திருமதி.கே .சம்பா என் . பெரேரா

2012.01.17

2016.04.21

திரு.டி.ஏ.கேமசிறி பியதிலக

2016.04.22

2016.06.22

திருமதி.என்.நளினி பாலசுப்ரமணியம்

2016.06.23

 
Scroll To Top